close
Loading...

Language

Language

History of the Tamil Language: Tamil is one of the oldest classical languages in the world, with a rich history dating back over two millennia. The language has a strong literary tradition and is considered one of the Dravidian languages, which are primarily spoken in South India and some parts of Sri Lanka.

Adoption and Development of Tamil in Sri Lanka: Tamil language and culture have deep roots in Sri Lanka. The history of Tamil in Sri Lanka can be traced back to the migration of Tamil people to the island from the Indian subcontinent over several centuries. These migrations resulted in the establishment of Tamil-speaking communities in different parts of Sri Lanka, particularly in the Northern and Eastern regions.

Tamil language and literature have played a significant role in the cultural and historical identity of the Tamil population in Sri Lanka. Over the centuries, various Tamil kingdoms and dynasties ruled parts of the island, contributing to the growth and development of the Tamil language and culture. The Chola dynasty, in particular, had a profound influence on Sri Lankan Tamil culture.

Sri Lankan Tamils have their own distinct dialects and linguistic features, which have evolved over time. These dialects have been influenced by the local Sinhala language as well as interactions with other communities on the island. In the modern era, the Tamil language continues to be spoken by Tamil communities in Sri Lanka and has been a source of cultural pride and identity.

In contemporary Sri Lanka, Tamil is one of the official languages of the country, alongside Sinhala. The adoption of Tamil as an official language in Sri Lanka was the result of linguistic and political developments that took place in the mid-20th century. This recognition of Tamil as an official language was aimed at ensuring the linguistic rights of the Tamil-speaking population and promoting equality.

 

In Tamil

தமிழின் தொன்மை:

தமிழ் மொழி எல்லா மொழிகளிலும் மூத்த மொழி என பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொல்லியல் சான்றுகளும் பழங்காலத்துக் கல்வெட்டுகளும்  இதற்கு  சான்று பகர்கின்றன. தமிழ் நாட்டிலும் கேரளாவிலும்  கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துகள், தமிழ் brahmi என்றழைக்கப்படும் தமிழி எழுத்துகளின் காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கு முற்ப ட்டது என்பதைக் காட்டுவதாகப் பேராசிரியர் றாஜன் கூறுகிறார். இந்தியா, இலங்கை தவிர எகிப்து, தாய்லாந்து, ஓமான் போன்ற நாடுகளிலும் கி. மு. 1ஆம், 2ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கொடுமணல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு உருக்கு ஆலை, செப்புச் சிலைகள், அழகாபரணங்கள் முதலியன இங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்கு சான்றாக அமைவதோடு கி.மு முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே இப்பகுதி தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியிருப்பதை காட்டுகின்றது. 

மேலும் ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் கி.மு பத்தாம் நூற்றண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைக் காட்டுவதாக அமெரிக்காவின் Beta Analytic Testing Laboratory செய்த carbon dating அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மதுரையின் தென்கிழக்கே சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக மிகச்செழிப்பான நகர நாகரீகம் அதாவது urban civilisation சங்க காலத்தில் இருந்தமையை உறுதி செய்ய முடிகிறது. 

தமிழ் இலக்கியங்களும் காப்பியங்களும் கற்பனையோ கட்டுக்கதையோ என்ற சந்தேகங்களை அழித்தொழிக்கும் வகையில் சங்க நூல்களில் குறிப்பிடப்பட்ட  செய்திகளுக்கு சான்றுகளாக இன்று கண்டெடுக்கப்பட்ட இன்னும் கண்டெடுக்கப்பட வேண்டிய அகழ் பொருட்கள் சான்று பகர்கின்றன. வேளாண்மை மட்டுமன்றி வணிகமும் கட்டிடக் கலையும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகாலமைப்பும்   சிறந்து விளங்கின என்பதற்கு சங்கப் பாடல்கள் மட்டுமல்ல, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களும் சான்று பகர்கின்றன.

தமிழ் மொழியின் சிறப்பு:

தமிழ்மொழி இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் கொண்ட சிறப்பிற்குரியது. இயல் என்பது பாடலாலும் அதாவது செய்யுளாலும் உரைநடையாலும் ஆக்கப்பட்ட இலக்கியங்களைக் குறிக்கும். இசை என்பது செவியூடாக மக்களைக் கவரச் செய்யும் இசைத்தமிழாகும். நாடகம் என்பது இயலும் இசையும் கலந்த நடிப்பையும் பேச்சையும் குறிக்கும். 

செம்மொழி அதாவது classical language ஆக இருக்க ஒரு மொழி மிகவும் பழைமையாக, இலக்கிய வளம் நிறைந்ததாக, அதன் தோற்றம் ஏனைய மொழிகளைச் சாராமல் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொண்டது தமிழ். இலக்கிய இலக்கண வளம் நிறைந்த செந்தமிழே முதன்முதலில் செம்மொழியாக 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 

 1578 இல் போர்த்துக்கேய மிஷனறியால் தம்பிரான் வணக்கம் என்னும் பிரார்த்தனை நூல்  தமிழில் அச்சேறியது. இதனால் முதன் முதலில் அச்சேறிய இந்திய மொழி என்ற பெயரையும் தமிழே பெறுகிறது!

Ethnologue எனப்படுவது அனைத்து மொழிகளின் ஆராய்ச்சி மற்றும் தரவுகளின் வெளியீடாகும். இதில் உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில்  2021 ஆம் ஆண்டு தமிழ் 19ஆம் இடத்தில் இருந்தது. 2022இல் இரண்டு இடங்கள் முன்னேறி 17ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. 2023 தரவுகளின் அடிப்படையில் 86.6 மில்லியன் மக்களால் பேசப்ப்டுகிற தமிழ் மொழி மீண்டும் 19ஆம் இடத்துக்கு நகர்ந்துள்ளது.

Go To Top